நாடாளுமன்றில் பெண்கள் இழிவுபடுத்தப்படுவதாக குற்றச்சாட்டு
நாடாளுமன்றில் பெண்கள் இழிவுபடுத்தப்படுவதாக இராஜாங்க அமைச்சர் டயானா கமகே குற்றம் சுமத்தியுள்ளார்.
நாடாளுமன்றில் இன்றைய தினம் சிறப்புரிமை கேள்வி ஒன்றை எழுப்பியதன் மூலம் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அண்மையில் நாடாளுமன்ற விவாதம் நடைபெற்ற போது ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தம்மை "பெண் நாய்" என இழிவு படுத்தியதாக தெரிவித்துள்ளார்.
இவ்வாறு பெண்களை இழிவு படுத்துவதற்கு இடமளிக்கக்கூடாது என தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினருக்கு எதிராக ஒழுகாற்று நடவடிக்கை
ஆளும் கட்சியாக இருந்தாலும் எதிர்க்கட்சியாக இருந்தாலும் பெண்கள் இழிவுபடுத்தப்படுவதனை தாம் அனுமதிக்கப் போவதில்லை என தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் பல்வேறு சந்தர்ப்பங்களில் பெண்கள் மிக மோசமாக இழிவுபடுத்தப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் காலங்களில் இவ்வாறு பெண்கள் இழிவுபடுத்தப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தம்மை தரக்குறைவாக பேசிய நாடாளுமன்ற உறுப்பினருக்கு எதிராக ஒழுகாற்று நடவடிக்கை எடுக்குமாறு அவர் கோரியுள்ளார்.
மேலும் தம்மை அல்லது பெண்களை இழிவுபடுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களை நாடாளுமன்றத்தில் வைத்து கன்னத்தில் அறைவதாக அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |