பொய்யான சமர்ப்பிப்புகளை வழங்கும் அரசியல் புகலிடக் கோரிக்கையாளர்கள்: டயானா கமகே பகிரங்கம்
ஐக்கிய இராச்சியத்தில் பொய்யான சமர்ப்பிப்புகளை வழங்கிய அரசியல் புகலிடக் கோரிக்கையாளர்களுடன் தாம் அரச திணைக்களங்களுக்கு சென்றுள்ளதாக இராஜாங்க அமைச்சர் டயானா கமகே கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று(21.09.2023) இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளார்.
அரசியல் தஞ்சம்
மக்கள் எவ்வாறு அதிகாரிகளை தவறாக வழிநடத்தி புகலிடம் பெறுகிறார்கள் என்பதை தனது கண்களால் பார்த்ததாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும் தாம் இங்கிலாந்தில் சட்டத்தரணியாக பணியாற்றிக் கொண்டிருந்த போது அரசியல் தஞ்சம் கோரிய பல இலங்கையர்களுடன் பிரித்தானியாவிலுள்ள குடிவரவுத் திணைக்களத்திற்குச் சென்றதன் மூலம் இவ்வாறான விடயங்களை அறிந்துக்கொண்டதாக இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பற்ற உறவு! இலங்கை நட்சத்திர கிரிக்கெட் வீரர் தனுஷ்க மீது அவுஸ்திரேலிய பெண் அடுக்கும் குற்றச்சாட்டுக்கள்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

சீன போர்விமானங்களை பயன்படுத்தி பாகிஸ்தான் இந்தியாவின் ரஃபேல் ஜெட்களை வீழ்த்தியது: அமெரிக்க வட்டாரம் உறுதி News Lankasri

மஞ்சள் கயிறு, நெற்றியில் குங்குமம்.. நம்ம இனியாவா இது? தனுஷ் பாடலுக்கு வைப் செய்யும் காட்சி Manithan
