டயானா கமகே இன்னும் ஐக்கிய மக்கள் சக்தியில்!
டயானா எங்கே?
அரசியலமைப்பின் 20வது திருத்தத்திற்கு ஆதரவளிப்பதற்காக 2020 ஆம் ஆண்டு பொது ஜன பெரமுன அரசாங்கத்துடன் இணைந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகே, இன்னும், ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிச் செயலாளராக பதவி வகிப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசியல் கட்சிகளில் பெண் பிரதிநிதித்துவம் குறித்த அறிக்கை ஒன்றிலேயே இந்த விடயம் வெளியிடப்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று கூறுகிறது.
நீக்கப்பட்ட டயானா

கமகே, அரசாங்கத்தில் இணைந்ததை அடுத்து அவர்,கட்சியிலிருந்து நீக்கப்பட்டதாக ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் ஏற்கனவே அறிவித்திருந்தனர்.
இந்தநிலையிலேயே புதிய தகவல் வெளியாகியுள்ளது
இதேவேளை தாமே, ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் உரிமையாளர் என்று டயானா கமகே கூறிவருகிறார்.

திட்டமிட்டதே நான்தான்... கனடாவில் 400 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் புதிய தகவல் News Lankasri