டயானா கமகே கட்சியில் இருந்து நீக்கம்! - சஜித் அணி அதிரடி நடவடிக்கை
நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகேவை கட்சியிலிருந்து நீக்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.
அந்த கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்ஜித் மத்துமபண்டார (Ranjith Madduma Bandara) இதனை தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் ஒழுக்காற்று குழு இன்று கூடிய நிலையில், இந்த தீர்மானத்தை எட்டியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
"அரசியலமைப்பின் 20வது திருத்தத்திற்கு எதிராக வாக்களிக்கும் கட்சி முடிவுக்கு எதிராக செயல்பட்டதற்காக டயானா கமகேவை கட்சியில் இருந்து நீக்கியுள்ளதாக ரஞ்ஜித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார்.
"20வது திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்த மற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது அவர்கள் சார்ந்த அந்தந்த கட்சிகளால் நடவடிக்கை எடுக்கப்படும்," என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், ஐக்கிய மக்கள் சக்தியின் இந்த நடவடிக்கைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக டயானா கமகே தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகம் ஒன்றிடம் பேசிய அவர் இதனை கூறியுள்ளார்.
"இது ஒரு நகைச்சுவை தவிர வேறில்லை. சஜித் பிரேமதாச முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை ஒரு சர்வாதிகாரி என்று அழைத்தார், ஆனால் சஜித் ஒரு பெரிய சர்வாதிகாரி.
பிரேமதாசவை விட ரணில் விக்கிரமசிங்கவிற்கு அதிக மூளை இருப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

Brain Teaser Challenge: மனதை குழப்பும் புதிர்- 7 வினாடியில் திருடனின் மனைவியை கண்டுபிடிக்க முடியுமா? Manithan

வெளிநாட்டு மாணவர்களுக்கு உணவு கிடையாது: உணவு வங்கிகளின் முடிவால் தவிக்கும் சர்வதேச மாணவர்கள் News Lankasri

வங்கதேசத்தில் பிரபல நடிகை கொலை வழக்கில் கைது: விமான நிலையத்தில் மடக்கி பிடித்த பொலிஸார் News Lankasri
