இலங்கையில் பாலியல் தொழிலை சட்டப்பூர்வமாக்குக! மீண்டும் சர்ச்சையை கிளப்பும் டயானா கமகே
பாலியல் தொழிலை இலங்கையில் சட்டபூர்வமாக்க வேண்டும் என சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்துள்ளார்.
பௌத்த நாடான தாய்லாந்து பாலியல் தொழிலை சட்டபூர்வமாக்கியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
அது அவர்களின் மதம் அல்லது கலாசாரத்திற்கு தீங்கு விளைவிக்கவில்லை எனவும் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனாதிபதியின் செயலாளருக்கு பணிப்புரை
இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,
கஞ்சா ஏற்றுமதியை எவ்வாறு சட்டப்பூர்வமாக்குவது என்பதை ஆராய்வதற்காக குழுவொன்றை நியமிக்குமாறு ஜனாதிபதி ஜனாதிபதியின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாகவும் அதற்கு அதிகாரிகள் தடையாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு ஜி.எஸ்.பி வரிச்சலுகைகள் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் கடன்கள் மற்றும் குடியுரிமை குறித்த குற்றச்சாட்டுகள் ஆகியவற்றைப் பெறுவதற்கு 22ஆவது அரசியலமைப்பில் திருத்தம் செய்யப்பட வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் கஞ்சா பயிர்ச்செய்கை தொடர்பான கருத்துக்கள் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்ததுடன், சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாதாக காணப்பட்டது. இந்த நிலையில் பாலியல் தொழிலை இலங்கையில் சட்டப்பூர்வமாக்குவது தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்தை மீண்டும் இராஜாங்க அமைச்சர் முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.