டயனா கமகே பிரித்தானிய பிரஜை-கடவுச்சீட்டை வழங்க முடியாது-குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர்
நாடாளுமன்ற உறுப்பினர் டயான கமகே பிரித்தானிய குடியுரிமை பெற்றுள்ளவர் என்பதால், அவருக்கு இலங்கை கடவுச்சீட்டை வழங்க முடியாது என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள கட்டுப்பாட்டாளர் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி அறிவித்துள்ளார்.
டயனா கமகே 2004 ஆம் ஆண்டு பிரித்தானியா குடியுரிமையை கொண்டுள்ளார்
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் நாடாளுமன்றத்தில் கடிதம் ஒன்றை தாக்கல் செய்திருந்தார். டயனா கமகே கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் பிரித்தானிய குடியுரிமையை கொண்டுள்ளதாக கூறியிருந்தார்.
அத்துடன் டயனா கமகேவிடம் ஐக்கிய ராஜ்ஜியத்தின் இலக்கம் 521398876 என்ற கடவுச்சீட்டு இருப்பதாகவும் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்திருந்தார்.
கடவுச்சீட்டை வழங்க முடியாது-குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர்
இந்த நிலையில், டயனா கமகே கடந்த 2014 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 24 அம் திகதி N 5091388 என்ற இலக்கத்தை கொண்ட இலங்கை கடவுச்சீட்டை பெற்றுள்ளார்.
கடந்த 2018 ஆம் ஆண்டு அவர செப்டம்பர் மாதம் 5 ஆம் திகதி ராஜதந்திர கடவுச்சீட்டையும் பெற்றுக்கொண்டுள்ளார்.
எனினும் டயனா கமகே பிரித்தானிய குடியுரிமையை இரத்துச் செய்துள்ளதை உறுதிப்படுத்தும் ஆவணங்களை சமர்ப்பிக்கவில்லை என்பதால், அவருக்கு புதிய ராஜதந்திர கடவுச்சீட்டை வழங்க முடியாது என குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் , பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளார்.
மேலும் டயனா கமகே சமர்ப்பித்த விசா விண்ணப்பங்களின் ஆவணங்களையும் குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் அந்த கடிதத்தில் இணைத்துள்ளார்.