டயனா கமகே மீதான தாக்குதல் சர்ச்சை: விசாரணைகள் ஆரம்பம்
நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் டயனா கமகே, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ரோஹன பண்டார மற்றும் சுஜித் சஞ்ஜய பெரேரா ஆகியோரால் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடுகளுக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று வெலிக்கடை பொலிஸ் நிலையம் தெரிவித்துள்ளது.
இராஜாங்க அமைச்சர் டயனா கமகே வெலிக்கடை பொலிஸ் நிலையத்திலும், நாடாளுமன்ற உறுப்பினர்களான ரோஹன பண்டாரவும், சுஜித் சஞ்ஜய பெரேராவும் மிரிஹான பொலிஸ் நிலையத்திலும் தங்களது முறைப்பாட்டை அளித்துள்ளனர்.
மோதல் சம்பவம்
எனினும், இந்த மோதல் சம்பவம் வெலிக்கடை பொலிஸ் நிலையத்துக்குட்பட்ட பகுதியில் இடம்பெற்றுள்ளமையால் முறைப்பாடுகள் வெலிக்கடை பொலிஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டுள்ளன.
அதன்படி, வெலிக்கடை பொலிஸ் நிலையம், நாடாளுமன்ற பொலிஸ் நிலையத்துடன் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக வெலிக்கடை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் தாக்குலுக்குள்ளானார் என்று தெரிவித்த இராஜாங்க அமைச்சர் டயனா கமகே, ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சில மணித்தியாலங்களின் பின்னர் அங்கிருந்து வெளியேறினார்.
நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்ஜய பெரேரா நாடாளுமன்றத்தில் உள்ள நூலகத்துக்கு அருகில் வைத்து தம் மீது தாக்குதல் நடத்தினார் என்று இராஜாங்க அமைச்சர் டயனா கமகே நேற்று நாடாளுமன்றில் உரையாற்றும் போது தெரிவித்திருந்தார்.

விடுதலைப் புலிகளின் தலைவருக்கு நாட்டில் ஒரு பாதி.....! நாடாளுமன்றத்தில் சர்ச்சைக்குரிய கருத்து - செய்திகளின் தொகுப்பு
நல்லூர் கந்தசுவாமி கோவில் 9ஆம் நாள் மாலை திருவிழா





ஹிந்தி - பௌத்த சிங்களம் இரட்டையர் நாகரிகம்! 2 நாட்கள் முன்

ஆபத்தான நிலையில் ஈஸ்வரி, தனது அம்மாவுக்கு செக் வைத்த ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

மீனாவிற்கு புடவை எல்லாம் வாங்கிகொடுத்து செல்லம் என கொஞ்சம் விஜயா.. சிறகடிக்க ஆசை சீரியலில் என்ன தான் நடக்கிறது? Cineulagam

மகாநதி சீரியலில் கதாநாயகியாக நடிக்கும் சிறகடிக்க ஆசை சீரியல் கோமதி பிரியா.. குவியும் வாழ்த்துக்கள் Cineulagam
