யாழ்ப்பாணம் மாநகர சபை எல்லைக்குள் டயலொக் நிறுவனம்! மாநகர சபை எடுத்துள்ள தீர்மானம்

Dialog Jaffna Sri Lanka
By Dhayani Jan 30, 2023 09:30 PM GMT
Report

யாழ்ப்பாணம் மாநகர சபை எல்லைக்குள் டயலொக் நிறுவனம் அமைக்கும் விளம்பரம் தொடர்பில் சபை உறுப்பினர்களின் அனுமதியின்றி ஒப்பந்தம் செய்தமை தொடர்பில் ஆளுநரின் கவனத்திற்கு உடன் கொண்டு செல்ல மாநகர சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2023 ஆம் ஆண்டிற்கான ஜனவரி மாத கூட்டம் இன்று சபை மண்டபத்தில் மாநகர முதல்வர் இ.ஆனோல்ட் தலைமையில் இடம்பெற்ற போதே மேற்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதற்கமைய மாநகர சபை எல்லைப் பரப்பிற்குள் 10 இடங்களில் விளம்பரம் அமைக்க 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இடம்பெற்ற மாதக் கூட்டத்தின் போதும் 2022 ஆம் ஆண்டின் ஆகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி இடம்பெற்ற விசேட கூட்டங்களின் அடிப்படையிலாக டயலொக் நிறுவனம் அமைக்கும் விளம்பரப் பணிகளில் மேற்கொள்ளும் திட்டம் தொடர்பாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாநகர சபை எல்லைக்குள் டயலொக் நிறுவனம்! மாநகர சபை எடுத்துள்ள தீர்மானம் | Dialog Company Within Jaffna Municipal Council

இவ்வாறான தீர்மானங்களிற்கு முரணாக பல விடயங்கள் உட்புகுத்தப்பட்டு சபைக்கு பாதகமாக தனியார் நிறுவனத்தின் நன்மையை மட்டும் முதன்மைப்படுத்தி இரகசியமாக தயாரிக்கப்பட்ட ஒப்பந்தமொன்றில் சபையின் அனுமதியின்றி முன்னாள் முதல்வரும், ஆணையாளரும் ஒப்பமிட்டுள்ளனரா என உறுப்பினர் ந.லோகதயாளன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கு பதிலளித்த முதல்வர் இ.ஆனோல்ட்,

யாழ்ப்பாணம் மாநகர சபை எல்லைக்குள் டயலொக் நிறுவனம்! மாநகர சபை எடுத்துள்ள தீர்மானம் | Dialog Company Within Jaffna Municipal Council

இது தொடர்பில் நான் ஒப்பமிடவில்லை என்பதோடு என்னிடமோ அல்லது எமது அலுவலகத்திலோ அதன் பிரதிகள் எவையும் இல்லையெனவும் பதிலளித்துள்ளார்.

இதனால் இதற்கு ஆணையாளர் பதிலளிக்க வேண்டும் என சபையில் கோரப்பட்டபோதும் அதில் முன்னாள் முதல்வர் ஒப்பமிட்டு நானும் ஒப்பமிட்டேன் என ஆணையாளர் ஜெயசீலன் பதிலளித்துள்ளார்.

அவ்வாறானால் அதன் பிரதியொன்றை வழங்குமாறு பல தடவை கோரியபோதும் சபைக்கு சமர்ப்பிக்கவில்லை. இதனையடுத்து சபைத் தீர்மானங்களிற்கு முரணாகவும், நிதி நடவடிக்கைக்கு முரணாகவும் தயாரிக்கப்பட்ட ஒப்பந்தம் ஒன்றில் சபைக்கு சமர்ப்பிக்காது இரகசியமாக மேற்கொண்ட ஒப்பந்தத்திற்கு ஒப்பமிட்ட இருவரும் மட்டுமே பொறுப்பு எனவும் சபையில் பேசப்பட்டதற்கு மேலதிகமாக துரையப்பா விளையாட்டரங்கையும் தாரை வார்த்து அவர்களின் விளம்பரங்களில் சேதம் ஏற்படுவது முதல் அத்தனை பராமரிப்பும் சபைக்குரியது.

யாழ்ப்பாணம் மாநகர சபை எல்லைக்குள் டயலொக் நிறுவனம்! மாநகர சபை எடுத்துள்ள தீர்மானம் | Dialog Company Within Jaffna Municipal Council

அத்தோடு ஏனைய இடங்களிலும் நாம் விளம்பரம் வழங்க முடியாது என்பதோடு இந்த ஒப்பந்தத்தில் இருந்து மாநகர சபை விலகுவதானால் இரட்டிப்பு பணம் வழங்க வேண்டும் என எழுதியுள்ளபோதும் நிறுவனம் விலகினால் எந்த நட்டஈடும் கிடையாது போன்ற பல மோசமான விடயங்கள் உண்டு.

எனவே இந்த அடிமை சாசனத்திற்கு நிகரான ஒப்பந்தம் தொடர்பில் இன்று சபையில் தற்போது பிரசன்னமாகியுள்ள எவருமே பொறுப்பு அல்ல என்பதோடு இந்த தீர்மானத்தையும், ஒப்பந்த பி்ரதியினையும் உடனடியாக உள்ளூராட்சி ஆணையாளர் மற்றும் மாகாண ஆளுநருக்கு அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் எந்தவொரு நடவடிக்கையினையும் சபை மேற்கொள்ள கூடாது. இன்றைய திகதிக்கு இந்த ஒப்பந்தம் சார்பில் நிதி ஏதும் அந்த நிறுவனத்திடம் இருந்து பெற்றுக்கொள்ளவும் கூடாது என உறுப்பினர் ந.லோகதயாளன் தீர்மானமாக முன்மொழிய, அதனை எம்.என்.பாலச்சந்திரன் வழி மொழிந்ததோடு இதனை உடனடியாக மொழி பெயர்த்து அத்தனை உறுப்பினர்களிற்கும் அனுப்பி வைப்பதோடு இந்த தீர்மானம் இன்றே நடைமுறைப்படுத்தப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார். 

மரண அறிவித்தல்

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
நன்றி நவிலல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

29 Oct, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, வள்ளிபுனம்

30 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை தெற்கு, கொழும்பு

29 Oct, 2024
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கொழும்பு

26 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, சிட்னி, Australia

28 Oct, 2015
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, வவுனிக்குளம், பருத்தித்துறை

26 Oct, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

27 Oct, 2011
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
6ம் ஆண்டு நினைவஞ்சலி

Edmonton, United Kingdom, England, United Kingdom

27 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், Morden, United Kingdom

27 Oct, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, சுன்னாகம், London, United Kingdom

27 Oct, 2015
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Den Helder, Netherlands

21 Oct, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, வெள்ளவத்தை, Pinner, United Kingdom

24 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
11ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

06 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US