சட்டத்தின் ஆட்சி எங்கே..! ரணில் மற்றும் குமார ஜயகொடி விவகாரங்களை முன்வைத்து தயாசிறி சாடல்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் தற்போதைய மின்சக்தி அமைச்சர் குமார ஜயகொடி ஆகியோருக்கு எதிராகச் சட்டம் இருவேறு விதமாகச் செயற்படுத்தப்படுகின்றதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் வைத்து நேற்றைய தினம் (06.03.2026) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
குற்றப்பத்திரிகை தாக்கல்
மேலும் தெரிவிக்கையில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நீதிவான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, நீதிமன்ற நடவடிக்கைகளின் பின்னரே அவருக்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
பிணை வழங்குவது அல்லது வழங்காதது தொடர்பான விடயங்கள் நீதிவான் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டு, அதன் பின்னரே அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
அதேநேரம், அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து அவதானம் செலுத்தப்பட வேண்டும்.

சட்டம் கையாளப்படும் விதம்
அவர் விடயத்தில் சட்டம் கையாளப்படும் விதம் குறித்துக் கேள்வி எழும்புகின்றது. பிணை வழங்குவது தொடர்பாக அமைச்சர் குமார ஜயகொடியை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தாமல், நேரடியாகக் குற்றப்பத்திரிகை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு ஒரே விடயத்தில் இருவேறு முறைகளில் சட்டம் செயற்படுத்தப்படுவது 'சட்டத்தின் ஆட்சி'தானா? எனவே, குற்றப்பத்திரிகை கையளிக்கப்படுவதற்கு முன்னர், அமைச்சர் குமார ஜயகொடியும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும் என்றார்.
பிரித்தானியாவை வாட்டும் வெப்பம்: 11 பகுதிகளில் வறட்சி அறிவிப்பு: 45 மில்லியன் மக்கள் பாதிப்பு News Lankasri
நடிகருடன் Living In Relationnல் உள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் நடிகை... பிரபலம் ஒபன் டாக் Cineulagam