30 இலட்சம் ரூபாய் பெறுமதியான முதிரை மரக்குற்றிகள் தர்மபுரம் பொலிஸாரால் மீட்பு
எந்தவித அனுமதிப்பத்திரமும் இன்றிய நிலையில் கன்டர் ரக வாகனம் மற்றும் கப்ரக வாகனங்களில் கொண்டு செல்லப்பட்ட முதிரை மரக்குற்றிகளை பொலிஸார் மீட்டுள்ளனர்.
இன்று அதிகாலை 2.00 மணியளவில் தர்மபுர பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக இரவு இரண்டு மணி அளவில் கொண்டு வரப்பட்ட முதிரை மரக்குற்றிகளையே பொலிஸார் மீட்டுள்ளனர்.
நீதிமன்றில் முன்னிலை
புதுக்குடியிருப்பு பகுதியிலிருந்து கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் உள்ள மரத்தளபாட உற்பத்தி நிலையத்திற்கு குறித்த மரக்குற்றிகள் கொண்டு செல்லப்பட்டுள்ளன.

இதன்போது, பொலிஸார் வாகனங்களை கைப்பற்றியதுடன் மூன்று சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளனர்.
வாகனம் மற்றும் சந்தேக நபர்களை நாளையதினம் கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



7 நாள் முடிவில் மாஸ் கலெக்ஷன் செய்துள்ள ரியோ ராஜின் ஆண்பாவம் பொல்லாதது படம்... இதுவரை எவ்வளவு? Cineulagam
இன்னும் 3 நாட்களில் குரு பெயர்ச்சி - இன்னும் 4 மாதங்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகும் ராசிகள் Manithan
குணசேகரன் போடும் மாஸ்டர் பிளான், ஜனனி சமாளிப்பாரா?... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam