பலமான தேசிய அரசியல் அமைப்பாக வருவதற்கு எமக்குள் ஒற்றுமை அவசியம்: த. சித்தார்த்தன்
தமிழ் தேசிய பரப்பில் உள்ள அனைத்து கட்சிகளும் ஒன்றுபடுவோமாக இருந்தால் அடுத்த கட்டமாக ஒரு பலமான தேசிய அரசியல் அமைப்பாக வந்து தமிழ் மக்களுடைய பிரச்சினைகளை முன்னெடுப்பதற்கு வசதியாக இருக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் (Dharmalingam Siddarthan) வலியுறுத்தியுள்ளார்.
ஊடகங்களுக்கு இன்றைய தினம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
நாம் தொடர்ச்சியாக அரசியல் தலைமைகளின் ஒற்றுமைக்கு முயற்சித்து கொண்டிருக்கின்றோம். தனிப்பட்ட ரீதியாகவும் மற்றவர்களுடன் பேசி பல முயற்சிகளை எடுத்து வருகின்றோம்.
இது தனி ஒரு மனிதன் செய்யக்கூடிய விடயமல்ல, அன்று இருந்த அரசியலுக்கும் இன்றுள்ள அரசியலுக்கும் பல வேறுபாடுகள் காணப்படுகின்றன.
தமிழ் தேசிய பரப்பில் உள்ள அனைத்து கட்சிகளும் ஒற்றுமைப்பட்டு ஒன்றுபடுவோமாக இருந்தால் அடுத்த கட்டமாக ஒரு பலமான தேசிய அரசியல் அமைப்பாக வந்து தமிழ் மக்களுடைய பிரச்சினைகளை முன்னெடுப்பதற்கு வசதியாக இருக்கும்.
ஆகவே மாவை, சுரேஷ், செல்வம் போன்ற அனைவரும் இணைந்து இந்த முயற்சியை எடுக்க வேண்டும் என்பதே எனது கோரிக்கை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
தமிழர்களின் ஒற்றுமை முயற்சிக்கு சித்தார்த்தன் தலைமை தாங்க வேண்டும் - மாவை வேண்டுகோள்

பங்கர் பஸ்டராக உருவெடுக்கும் இந்தியாவின் அக்னி ஏவுகணை - சீனா, பாகிஸ்தானுக்கு கடும் அச்சுறுத்தல் News Lankasri

அஜித் குமார் மரண வழக்கில் கைதான 5 காவலர்களையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு News Lankasri
