யாழ்ப்பாணத்திலும் ஒரே நாளில் கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ளலாம்! புதிய திட்டத்தை ஆரம்பிக்கிறார் தம்மிக்க
யாழ்ப்பாணம், கண்டி, மாத்தறை ஆகிய குடிவரவு, குடியகல்வு பிராந்திய அலுவலகங்களிலும் ஒருநாள் சேவை ஆரம்பிக்கப்படும் என முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார்.
ஊடகமொன்றில் கருத்து வெளியிடும் போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
கடவுச்சீட்டு ஒருநாள் சேவை
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கடவுச்சீட்டு ஒருநாள் சேவை துரிதப்படுத்தப்படும். இதற்காக யாழ்ப்பாணம், கண்டி, மாத்தறை ஆகிய பிராந்திய அலுவலகங்களிலும் ஒருநாள் சேவை ஆரம்பிக்கப்படும்.
| தம்மிக பெரேரா அமைச்சராக பதவிப்பிரமாணம் |

இதன்முதல் கட்டமாக, யாழ்ப்பாணத்தில் உள்ள குடிவரவு, குடியகல்வு அலுவலகத்தில் எனது பிரத்தியேக பணத்தை முதலீடு செய்து ஒருநாள் சேவை ஆரம்பிக்கப்படும்.
நிலைமை மாற்றியமைக்கப்படும்
தற்போது கடவுச் சீட்டைப் பெறுவதற்கு நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்த நிலைமை மாற்றியமைக்கப்படும்.
| நாடாளுமன்ற உறுப்பினராக தம்மிக்க பெரேரா சத்திய பிரமாணம் |

இதனைத் தவிர மேலும் ஐந்து இடங்களில் பிராந்திய அலுவலகங்களையும், ஒருநாள் சேவையையும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
கண்மணி அன்புடன் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் விஜய் டிவி சீரியல் வில்லன்... யார் தெரியுமா? Cineulagam
அவ ஆரா பத்துக்கு பத்து பாடலுக்கு பிரியங்கா தேஷ்பாண்டே யாருடன் நடனம் ஆகியுள்ளார் பாருங்க.. வீடியோ இதோ Cineulagam
ரயில் நிலையத்தில் படுத்துறங்கிய லாரி ஓட்டுநர் மகன் - RCB அணியின் நம்பிக்கை நட்சத்திரம் News Lankasri
Tamizha Tamizha: உடல் பருமனை விரும்பி திருமணம் செய்த கணவர்! நாளடைவில் கணவனால் அனுபவிக்கும் கொடுமை Manithan
சிதைக்கப்பட்ட 10,000க்கும் மேற்பட்ட இலக்குகள்: நிலைகுலைந்து நிற்கும் ஈரான்: அமெரிக்கா தகவல் News Lankasri