இன்னும் சரியான வழியை தேடாத இலங்கை! நெருக்கடிக்கான காரணத்தை வெளிப்படுத்திய தம்மிக்க
இலங்கையில் நிலவும் வரி நெருக்கடிக்கு டொலர் பற்றாக்குறையே காரணம் என நாடாளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா குற்றம் சுமத்தியுள்ளார்.
ஹம்பாந்தோட்டை - மித்தெனிய பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் நிலவும் வரி நெருக்கடிக்கு டொலர் பற்றாக்குறையே காரணம்.
டொலரின் பற்றாக்குறை காரணமாக, இலங்கையின் இறக்குமதிகள் கணிசமான அளவு குறைந்துள்ளன.
வரி அதிகரிப்பு குறித்து விளக்கம்
இதன்மூலம் சுங்க வரி மற்றும் ஏனைய வரிகள் மூலம் ஈட்டப்படும் வருமானம் நேரடியாக பாதிக்கப்படுகின்றன.
சுங்க வரிகள் மற்றும் வரிகளில் இருந்து இழந்த பணத்தை சம்பாதிப்பதற்காக, மற்ற வரிகள் அதிகரிக்கப்படுகின்றன.
இதற்கு பின்னால் உள்ள அடிப்படை பிரச்சினை டொலர் பற்றாக்குறையாகும். டொலர்களை சம்பாதிக்க இன்னும் சரியான வழியை இலங்கை தேடவில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |