மகளின் கண் முன்னே நீர்வீழ்ச்சியில் வீழ்ந்த தாய் சடலமாக மீட்பு (video)
டெவோன் நீர்வீழ்ச்சியில் நேற்று (22.04.2023) விழுந்த பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
திம்புல்ல பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போகவத்தை பகுதியை சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தாய் ஒருவர் டெவோன் நீர் வீழ்ச்சியில் வீழ்ந்துள்ள நிலையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
முதலாம் இணைப்பு
நான்கு பிள்ளைகளின் தாய் ஒருவர் டெவோன் நீர் வீழ்ச்சியில் வீழ்ந்து காணாமல்போயுள்ளதாக திம்புல்ல பத்தனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் இன்று (22.4.2023) இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு காணாமல்போனவர் திம்புல்ல பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போகவத்தை பகுதியை சேர்ந்த 34 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தாய் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
தேடுதல் நடவடிக்கைகள் தீவிரம்
இந்நிலையில், தேடுதல் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையிலும் இன்று மாலை வரை அவரை கண்டுபிடிக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பெண் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது தவறி வீழ்ந்தாரா அல்லது வேறு ஏதும் நடந்ததா என்பது தொடர்பாக பல்வேறு கோணங்களில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை திம்புல்ல பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.









