வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்பாக போராட்டம்
வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்னால் அபிவிருத்தி உத்தியோகத்தர்களினால் இன்றைய தினம் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் நாட்டிற்கு சுமை என்ற கருத்தை அரசாங்கம் விலக்கிக்கொள்ள வேண்டும் என இதன்போது நாடளாவிய ரீதியாக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கத்தினால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
அத்துடன் அரச உத்தியோகத்தர்களின் அடிப்படை சம்பளத்தை பத்தாயிரம் ரூபாவால் உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையும் இந்த சந்தர்ப்பத்தில் முன்வைக்கப்பட்டிருந்தது.
மேலும் அரச ஊழியர்களின் வயதெல்லையை 65 வயதாக உயர்த்தியமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அரச ஊழியர்களின் கருத்து சுதந்திரம் என்பன தொடர்பில் இந்த போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.









ஜீ தமிழின் நினைத்தாலே இனிக்கும் சீரியலின் கடைசிநாள் படப்பிடிப்பு முடிந்தது... புகைப்படங்கள் இதோ Cineulagam

ஐப்பசி மாதத்தில் அதிர்ஷ்ட காணும் 6 ராசியினர்- உங்க ராசியும் இருக்கா பாருங்க- இன்றைய ராசிப்பலன் Manithan

பிரித்தானியாவில் மாணவர்களின் தலைகளை கழிப்பறையில் திணித்து: வெளிச்சத்திற்கு வந்த கொடூரம் News Lankasri
