சிறுமி ஒருவரை தகாத செயற்பாட்டுக்கு உட்படுத்திய அரச அதிகாரி கைது
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர் ஒருவர் சிறுமி ஒருவரை தகாத செயற்பாட்டுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் புதுக்குடியிருப்பு பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கை நேற்று (18.09.2024) இடம்பெற்றுள்ளது.
இதன்போது விசுவமடு கிழக்கினை சேர்ந்த 33 வயதுடைய சந்தேக நபர் மீது பாதிக்கப்பட்ட சிறுமி ஒருவர் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
பொலிஸார் நடவடிக்கை
இதற்கு அமைவாக இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

சிறுமியை பாலியல் ரீதியாக தகாத செயற்பாட்டிற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் குறிப்பிட்ட அரச உத்தியோகத்தரை புதுக்குடியிருப்பு பொலிஸார் கைதுசெய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
தங்கம் முதல் வெள்ளி நாணயம் வரை…ஜேர்மனியில் 2000 ஆண்டுகள் பழமையான புதையல் கண்டுபிடிப்பு News Lankasri
உண்மையை மறைத்த கோமதி-மீனாவிற்கு, பாண்டியன் செந்தில் கொடுத்த தண்டனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam