நீண்ட காலத்திற்குப் பின்னர் கொழும்பு பங்குச் சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றம்
கொழும்பு பங்குச் சந்தையில் கடந்த ஒருவார காலமாக தொடர்ச்சியான வளர்ச்சி காணப்படுகின்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எரிபொருள் விநியோகம் சீராகத் தொடங்கியதன் பின்னர் பங்குச் சந்தை புள்ளிகள் கடந்த ஒரு வார காலமாக தொடர்ச்சியாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளன.
பங்குகளின் விலைச்சுட்டி அதிகரிப்பு
அதன் பிரகாரம் நேற்றைய தினம் அனைத்துப் பங்குகளின் விலைச்சுட்டி 206.17 புள்ளிகளினால் அதிகரித்துள்ளது.
இது 2.46 வீத வளர்ச்சியாகும் என தெரிவிக்கப்படுகிறது.
நேற்றைய நாளின் இறுதியில் அனைத்து விலைச்சுட்டிகளும் 8.706 வீதத்தினால் அதிகரித்துக் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை நீண்ட காலத்தின் பின்னர் கொழும்பு பங்குச் சந்தையின் தினசரி புரள்வு கடந்த 4ஆம் திகதி 3 பில்லியன் ரூபாவை கடந்துள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
இதன்படி, நேற்றைய தினம் கொழும்பு பங்குச்சந்தை பரிவர்த்தனைகளின் முடிவில் 3.79 பில்லியன் ரூபா பரிவர்த்தனை புரள்வு பதிவாகியுள்ளதாகவும் செய்திகள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
பங்குச் சந்தையின் தினசரி வருவாய் 3 பில்லியனைத் தாண்டியுள்ளது |