பங்குச் சந்தையின் தினசரி வருவாய் 3 பில்லியனைத் தாண்டியுள்ளது
நீண்ட காலத்தின் பின்னர் கொழும்பு பங்குச் சந்தையின் தினசரி புரள்வு 3 பில்லியன் ரூபாவை நேற்று (04) கடந்துள்ளது.
இதன்படி, நேற்றைய தினம் கொழும்பு பங்குச்சந்தை பரிவர்த்தனைகளின் முடிவில் 3.79 பில்லியன் ரூபா பரிவர்த்தனை புரள்வு பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது.
மேலும், நேற்றைய வர்த்தக முடிவில் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண்களும் 149.00 புள்ளிகள் அதிகரித்து 8,229.14 புள்ளிகளாகவும், S&P Sri Lanka 20 சுட்டெண் 91.62 புள்ளிகள் அதிகரித்து 2,677.67 புள்ளிகளாகவும் காணப்பட்டன.

இந்த அதிகரிப்பு முந்தைய நாளுடன் ஒப்பிடுகையில் முறையே 1.84 சதவீதம் மற்றும் 3.54 சதவீத அதிகரிப்பாகும். 114 நிறுவனங்களும் இந்தப் பங்கு விலைக் குறியீட்டின் அதிகரிப்புக்கு சாதகமான பங்களிப்பைச் செய்துள்ளன.
தொடர்ந்து மூன்றாவது நாளாக அனைத்துப் பங்கு விலைக் குறியீடுகளும் 100 புள்ளிகளைத் தாண்டியிருப்பது சிறப்பு.
மீனாவிற்கு ஷாக் கொடுத்த செந்தில் என்ன செய்யப்போகிறார், பெரிய சிக்கலில் மயில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோட் Cineulagam
ட்ரம்ப் - சவுதி மெகா ஒப்பந்தம்... தூக்கம் தொலைத்த இஸ்ரேல்: ஆபத்தான போர் விமானங்கள் விற்பனை News Lankasri
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam