லொத்தர் சபை வரலாற்றில் முதல் தடவையாக 3 பில்லியன் ரூபா இலாபம்! வெளியான தகவல்
லொத்தர் சபை வரலாற்றில் முதல் தடவையாக 3 பில்லியன் ரூபா இலாபத்தை பதிவு செய்ய முடிந்ததாக தேசிய லொத்தர் சபையின் தலைவர் அஜித் குணரத்ன கூறியுள்ளார்.
கண்டி மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற அபிவிருத்தி லொத்தர் வெற்றியாளர்களுக்கான நிதி காசோலை வழங்கும் பிரதான வைபவத்தில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
சிறந்த நிர்வாகம்
மேலும் தெரிவிக்கையில், கோவிட் தொற்று காரணமாக நாட்டில் ஏற்பட்ட பொருளாதார மற்றும் அரசியல் சவால்களால் நாட்டின் தனியார் மற்றும் அரச துறைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.

எனினும் அதனை அச்சமின்றி எதிர்கொண்டு சிறந்த நிர்வாகத்துடன் தேசிய லொத்தர் சபை தனது இலக்குகளை எட்டியுள்ளது.
தேசிய லொத்தர் சபை புதுப்பிக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் DLB என புதிய வர்த்தக நாமத்தில் செயற்படும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri
முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
பிரித்தானியாவின் மிகப்பெரிய பணக்காரர் காலமானார்: வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்கிய இந்தியர் News Lankasri