ராஜபக்சவினர் இருக்கும் வரை ரணில் அல்ல புத்தர் வந்தாலும் நாடு முன்னேறாது
ராஜபக்சவினரை வைத்துக்கொண்ட ரணில் அல்ல புத்த பகவான் வந்தாலும் நாட்டை கட்டியெழுப்ப முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
குரக்கன் சால்வையின் படம் இருக்கும் வரை நாடு முன்னேறாது. ராஜபக்சவினர் சம்பந்தப்பட்டுள்ள அரசாங்கம் சுனாமியை விட நாட்டுக்கு பாரதூரமான சேதங்களை ஏற்படுத்தும்.

நல்ல மனிதர்களை இணைத்துக்கொண்டு உண்மையான சர்வக் கட்சி அரசாங்கத்தை உருவாக்கி இருந்தால், மக்கள் வரிசைகளில் நிற்கும் நிலைமை ஏற்பட்டிருக்காது.
குறைந்தது மக்கள் அந்த அரசாங்கத்திற்கு ஒரு மாத கால அவகாசத்தையும் வழங்கி இருப்பார்கள். நல்ல சூழ்நிலை ஏற்பட்டால், நாடு அபிவிருத்தி அடையும் என்பதுடன் முதலீடுகளும் வர ஆரம்பிக்கும் எனவும் நளின் பண்டார கூறியுள்ளார்.
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 4 நாட்கள் முன்
அவர் கிரீன்லாந்தைக் கைப்பற்றினால்... உலக முடிவுக்கு காரணமாகும்: ட்ரம்பிற்கு ரஷ்யா எச்சரிக்கை News Lankasri
Bigg Boss: Bigg Boss: உங்கள் பயணம் இத்துடன் முடிந்தது... ஒலித்த பிக்பாஸ் குரல்! வெளியேறிய போட்டியாளர்கள் Manithan
12ம் வகுப்பு தோல்வி... நிச்சயதார்த்தத்துடன் நின்று போன திருமணம்! பலரும் அறியாத பிக்பாஸ் திவ்யாவின் கதை Manithan