நெடுந்தீவில் கைது செய்யப்பட்ட 7 தமிழக கடற்தொழிலாளர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு(Photo)
இலங்கை கடற்பரப்புக்குள் சட்டவிரோதமான முறையில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 7 தமிழக கடற்தொழிலாளர்களையும் எதிர்வரும் 09ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் தடுத்து வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
சுற்றுக்காவல் பணி
நெடுந்தீவு கடற்பரப்பில் புதன்கிழமை சட்டவிரோதமாக படகொன்றில் நுழைந்து 7 தமிழக கடற்தொழிலாளர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போதே, அப்பகுதியில் சுற்றுக்காவல் (ரோந்து) பணியில் ஈடுபட்டிருந்த கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட கடற்தொழிலாளர்களை, மேலதிக சட்ட
நடவடிக்கைக்காக நேற்றையதினம் வியாழக்கிழமை கடற்றொழில் மற்றும் நீரியல்
வளத்துறை திணைக்களத்தின் ஊடாக ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய
வேளையே நீதிமன்று 7 பேரையும் விளக்கமறியலில் தடுத்து வைக்க உத்தரவிட்டுள்ளது.



