சட்டவிரோத வெடிமருந்துடன் கைதானவரை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி
முல்லைத்தீவு நகர் பகுதியில் சட்டவிரோத வெடிமருந்து மற்றும் கசிப்பினை உடமையில் வைத்திருந்த நபர் ஒருவரை முல்லைத்தீவு பொலிசார் கைது செய்துள்ளார்கள்.
கடந்த 24.10.21 அன்று மாலை வேளை பகுதியில் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்ட முல்லைத்தீவு பொலிசார் இவரை கைது செய்துள்ளார்கள்.
சுதந்திரபுரம் உடையார் கட்டு புதுக்குடியிருப்பினை சேர்ந்த 42அகவையுடைய நபரிடம் இருந்து 200 கிராம் வெடிமருந்து மற்றும் 1500 மில்லிலீற்றர் கசிப்பு என்பன மீட்கப்பட்டுள்ளன.
இவரை 25.10.21 அன்று முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய பொலிசார் அவரை பொலிஸ் தடுப்பு காவலில் தடுத்து வைத்து விசாரிக்க மன்றில் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
நீதிமன்றம் அவரை 72 மணத்தியாலங்கள் பொலிஸ் காவலில் தடுத்து வைத்து விசாரிக்க
அனுமதி வழங்கியுள்ளது.
இன்னிலையில் பொலிசார் அவரை தடுத்து வைத்து விசாரணைக்கு
உட்படுத்தி வருகின்றார்கள்.
அரசியல்வாதிகள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மறைத்துவைத்துள்ள கோடிக்கணக்கான பணம் - எடுக்கப்பட்டுள்ள அதிரடி நடவடிக்கை
ஹோர்முஸ் நீரிணையில் செல்லும் கப்பல்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை - வீழ்த்தப்பட்ட 8 அமெரிக்க தளங்கள்
ஹரக் கட்டா பணம் வழங்கிய பட்டியலில் பெரும் புள்ளிகளின் பெயர்கள்! இலங்கை வரலாற்றில் பதிவாகவுள்ள பெரும் சம்பவம்
பஹ்ரைன் நாட்டின் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்: மத்திய கிழக்கில் மீண்டும் அதிகரிக்கும் பதற்றம் News Lankasri