கடந்த 24 மணிநேரத்தில் கைது செய்யப்பட்டவர்களின் விபரம்
சுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப் பகுதியில் 417 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில் பெரும்பாலானவர்கள் கம்பளை பிரதேசத்திலேயே கைது செய்யப்பட்டுள்னர்.
அதன்படி அங்கு 112 பேரும், கண்டியில் 55 பேரும் மற்றும் மத்தளையில் 45 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த குற்றச்சாட்டுக்காக கடந்த ஒக்டோபர் 30 முதல் இதுவரையான காலப் பகுதியில் மொத்தம் 47,240 நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை நேற்றைய தினம் கொழும்புக்கான 14 நுழைவாயில்களில் 7,062 வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
இவற்றில் மாகாணங்களுக்கு இடையேயான பயணக் கட்டுப்பாடுகளை மீறி பயணிக்க முயன்ற 165 நபர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.





டிரம்புக்கு வயது 79 இல்லை…வெறும் 65 வயது தான்! மருத்துவ அறிக்கை வெளியிட்ட வெள்ளை மாளிகை News Lankasri

இது என்ன ஸ்கூலா.. எழுந்து நிற்காதது ஒரு பிரச்சனையா? விஜய் சேதுபதியை திட்டும் நெட்டிசன்கள்! Cineulagam
