பசறை விபத்து - பலி எண்ணிக்கை 15 ஆக உயர்வு! உயிரிழந்தவர்களின் விபரங்கள் வெளியாகின
பசறை 13வது மைல் கல் பகுதியில் இன்று காலை இடம்பெற்றிருந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
லுணுகலையிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற தனியார் பேருந்து ஒன்று இன்று காலை 07.15 மணியளவில் வீதியில் இருந்து விலகி 200 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியது.
எதிர் திசையில் வந்த லொறி ஒன்றுக்கு இடமளிக்க முயன்ற போதே இந்த விபத்து இடம்பெற்றிருந்தது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.
காயமடைந்தவர்கள் பசறை மற்றும் பதுளை வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காயமடைந்த 29 பேர் பதுளை வைத்தியசாலையிலும், மூன்று பேர் பசறை வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
13 பெண்கள், 15 ஆண்கள் மற்றும் ஐந்து சிறுவர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நால்வர் ஆபத்தான நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த ஒருவரும் பாறை சரிந்து விழுந்ததில் படுகாயமடைந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த 14 பேரின் சடலங்கள் பசறை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மற்றொருவர் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்து நடந்த நேரத்தில் சுமார் 50 பயணிகள் பேருந்தில் பயணித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் பேருந்து பலத்த சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதேவேளை, இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் விபரங்களும் தற்போது வெளியாகியுள்ளன.
ராமன் நாகரத்தினம் - மீதும்பிட்டிய, ஜயதுன் பேபி - 24 ஆம் கட்டை லுணுகல, சுப்ரமணியம் ராஜேந்திரன் - சோலன்ஸ், ஆர்.எச்.எம்.சந்தமாலி - யப்பம்ம ஹொப்டன், அலிமா உம்மா - வெல்லவெல லுணுகல, பொன்னழகள் டேனியல் ஹரிகரன் - ஹாலிஎல, எம்.எ.ஏசு். சத்சரணி - லுணுகல, அந்தோனி நோவா - அடாவத்த லுணுகல, வெள்ளையன் சுப்ரமணியம் - தேஷ்போக், பாக்கியநாதன் யோகநாதன் - மீதும்பிட்டி, ஆர்.எம் அசோக பத்மகுமார - யப்பம, பெருமாள் முரளிதரன் - எல்ராடோ லுணுகலை, சொக்கன் - 19 ஆம் கட்டைஹொப்டன் இதேவேளை உயிரிழந்த அனைவருக்கும் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.
அத்துடன் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு உடனடி உதவியாக அரசாங்கத்தால் தலா 25 ஆயிரம் ரூபா வழங்கப்படவுள்ளது.
வானதி சொன்ன விஷயத்தால் வீட்டைவிட்டு அனுப்பப்படுகிறாரா நிலா.. அய்யனார் துணை சீரியல் புதிய புரொமோ Cineulagam
பேசியே எதையும் சாதிக்கும் அசாத்திய பேச்சாற்றல் கொண்ட 3 ராசிகள்! உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan