வடக்கு மாகாணத்தில் ஒக்டோபர் மாதத்தில் பதிவாகிய கோவிட் தொற்றாளர்களின் விபரம்
வடக்கு மாகாணத்தில் ஒக்டோபர் மாதத்தில் 2 ஆயிரத்து 612 பேர் கோவிட் நோய்த்தொற்றுக்கு உள்ளாகியுள்ளதுடன், 71 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஒக்டோபரில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 44 பேரும், வவுனியா மாவட்டத்தில் 14 பேரும் உயிரிழந்துள்ளனர் என்று சுகாதாரத்திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வடக்கு மாகாணத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (ஒக். 3) 74 பேர் கோவிட் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஒக்டோபர் மாதத்தில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 865 பேரும்,வவுனியா மாவட்டத்தில் 703 பேரும், கிளிநொச்சி மாவட்டத்தில் 654 பேரும்,மன்னார் மாவட்டத்தில் 273 பேரும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 117 பேரும், கோவிட்-19 நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், யாழ்ப்பபாணம் மாவட்டத்தில் 44 பேரும்,வவுனியா மாவட்டத்தில் 14
பேரும், கிளிநொச்சியில் 9 பேரும்,முல்லைத்தீவில் 4 பேரும்
என 71 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதன்மூலம் 2020 மார்ச் தொடக்கம் நேற்றுவரை வடக்கு மாகாணத்தில் 833 பேர்
கோவிட் நோயினால் உயிரிழந்துள்ளனர்.
