ஒமிக்ரோன் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட பிரதேசங்கள் தொடர்பான தகவல் வெளியானது
நாட்டின் மூன்று மாவட்டங்களில் ஒமிக்ரோன் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சுகாதார அமைச்சின் கோவிட் தொற்றாளர்களை வீடுகளில் பராமரிக்கும் பிரிவின் பிரதானியான விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் மல்காந்தி கல்ஹேன இது தொடர்பில் விளக்கமளித்துள்ளார்.
இதன்படி, கொழும்பு, கம்பஹா மற்றும் அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களிலிருந்து ஒமிக்ரோன் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இலங்கையில் இதுவரை ஒமிக்ரோன் தொற்றுக்குள்ளான 48 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், கடந்த இரு வாரங்களில் ஒமிக்ரோன் தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்து வருவதாகவும் அவர் கூறுகின்றார்.
ஒமிக்ரோன் தொற்றினால் ஏற்படும் ஆபத்து தொடர்பில் அறிந்து, சுகாதார அமைச்சினால் வெளியிடப்படும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி செயற்படுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஒமிக்ரோன் தொற்றினால் முழு நாட்டையும் அபாயத்திற்கு உட்படுத்தும் வகையில் செயற்படுவதை தவிர்த்துக்கொள்ளுமாறும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாங்கள் உயிருடன் இருக்கிறோம்... காஷ்மீர் தாக்குதலில் கொல்லப்பட்ட கடற்படை அதிகாரி வீடியோவின் உண்மை நிலை News Lankasri

அமெரிக்காவிற்குள் விசா இல்லாமல் நுழைய 41 நாடுகளுக்கு அனுமதி: விதிமுறைகள், ESTA தேவைகள் News Lankasri
