உள்ளுராட்சி தேர்தலில் கட்சி தாவியவர்கள் விபரம் வெளிப்படும்
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை கையளித்த பின்னர் வேறு கட்சிகளில் இணைந்தவர்கள் தொடர்பில் தகவல் வெளியிடப்படும் என்று தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
முன்னைய வேட்பு மனுப்பட்டியலின்படியே உள்ளூராட்சி தேர்தல் நடைபெறவுள்ளதால் இந்த தகவல் வெளிப்படுத்தப்படும்; என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
நீதிமன்ற உத்தரவு
நீதிமன்ற உத்தரவுக்கு அமைய, ஏற்கனவே கையளிக்கப்பட்டுள்ள வேட்பு மனுக்களின் அடிப்படையிலேயே இந்த தேர்தல் நடத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை தேர்தல் சட்டத்தின் அடிப்படையில், தெரிவு செய்யப்பட்ட பின்னர் வேறு கட்சிக்கு செல்லும் வேட்பாளர்களை வெளியேற்றுவது அல்லது நீக்குவது குறித்த தீர்மானத்தை எடுக்கும் அதிகாரம் கட்சியின் பொதுச் செயலாளருக்கு இருப்பதாக ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, கடந்த அரசாங்கம் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை இரத்து செய்து புதிதாக வேட்புமனுக்களை கோரும் யோசனையை முன்வைத்த போதிலும் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பிரித்தானியாவை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ள இலங்கையர்: கர்ப்பிணி மனைவியின் அச்சம் News Lankasri
FIFA உலகக் கிண்ணம்... குழுச் சுற்றில் கட்டாயம் பார்க்க வேண்டிய ஐந்து முக்கிய ஆட்டங்கள் News Lankasri