விடுதலைப் புலிகள் தொடர்பில் போலி தகவல் பரப்பியவர் யார்....! பின்னணி குறித்து வெளியான திடுக்கிடும் தகவல்கள்
கிளிநொச்சியில் விடுதலை புலிகள் அமைப்பின் பயிற்சி முகாம் ஒன்று செயற்பட்டு வருவதாக போலியான தகவல் பரப்பிய நபர் பல்வேறு பெயர்களில் தோன்றிய சங்கீத் டயசேகர என தெரியவந்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
குறித்த நபர், கடந்த காலங்களில் ஷிராந்தி ராஜபக்சவின் தனிப்பட்ட மருத்துவராகவும் செயற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
விடுதலை புலிகள் அமைப்பு தொடர்பாக கருத்துக்கள் குறித்து வாக்குமூலம் பெறுவதற்காக குறித்த நபர் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்த நிலையில் இன்றைய தினம் கைது செய்யப்பட்டார்.
போலி தகவல் பரப்பியவர் யார்
இந்த நிலையில் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் இது குறித்து எழுப்பப்பட்ட கேள்வியின்போது, பளை பகுதியில் அனுமதியற்ற முறையில் பயிர்செய்கை நிலம் ஒன்று பேணப்பட்டு வருவது தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

உதய கம்மன்பில, விமல் வீரவன்ச, சரத் வீரசேகர உள்ளிட்ட ராஜபக்ச குடும்பத்தின் பிரசாரகர்களே விடுதலை புலிகள் அமைப்பு தொடர்பான இவ்வாறான பொய்ப் பிரசாரங்களை முன்னெடுத்ததில் முன்னணியில் இருந்தனர்.
தற்போது அந்தப் பிரசாரங்களை வேறு வடிவில் கண்டங்களுக்கிடையேயான மனித உரிமைகள் ஆணையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் எனக் கூறிக்கொள்ளும் சங்கீத் டயசேகர போன்ற நபர்கள் முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த நபர் ஷிராந்தி ராஜபக்சவின் மருத்துவராகத் தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட காலத்தில், ராஜபக்ச குடும்பத்தினருடன் இணைந்து மேற்கொண்ட செயற்பாடுகள் குறித்தும் புலனாய்வாளர்களின் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
Bigg Boss 10: முதல் குறும்படத்தை போட்டு வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள்! அதிரடி காட்டிய விஜய்சேதுபதி Manithan