காதலனை காப்பாற்ற உயிரை விட்ட காதலி தொடர்பில் வெளியான தகவல்
பதுளை, மஹியங்கனை பொலிஸ் பிரிவிலுள்ள வியன்னா கால்வாயில் தவறி விழுந்த காதலனை காப்பாற்றிய போது, உயிரிழந்த காதலி பட்டமளிப்பு விழாவுக்காக தயாராக இருந்ததாக அவரின் தெரிவித்துள்ளனர்.
பட்டமளிப்பு விழாவுக்கு தேவையான ஆடைகளை பெறுவதற்கு காதலனுடன் சென்ற போதே இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது.
காதலனை காப்பாற்ற காதலி விழுந்ததனை அங்கிருந்த உயிர் காப்பாளர்கள் பெரியளவில் அவதானிக்கவில்லை.
மகளின் சடலம்
இளைஞனை காப்பாற்றியவர்களுக்கு எங்கள் மகள் குறித்து அவதானம் இருக்கவில்லை என பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
சுமார் 18 மணி நேரத்தின் பின்னர் மகளின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. 3 மகன்கள் உள்ள குடும்பத்தில் ஒரே மகளான அவர் ரஜரட்ட பல்கலைக்கழகத்தில் கணினி பிரிவில் கற்று வந்துள்ளார்.
அன்றைய தினம் பல்கலைகழகத்திற்கு சென்று பட்டமளிப்பு விழாவிற்கான தகவல்களை வழங்கிவிட்டு அதற்கான ஆடைகளை பெற்றுக் கொண்டு திரும்பும் பொது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதென உயிரிழந்த பெண்ணின் தந்தை தெரிவித்துள்ளார்.





ஈழத் தமிழர் விடுதலைக்கு வழி என்ன..! யார் முன்வருவர்.. 8 மணி நேரம் முன்

இளவரசர் ஜார்ஜ் இனி தன் குடும்பத்துடன் சேர்ந்து பறக்கமுடியாது: வித்தியாசமான ராஜ குடும்ப விதி News Lankasri

Siragadikka Aasai: தானாக வந்து வசமாக சிக்கிய ரோகினி... குடும்பத்தினர் க்ரிஷ் அம்மாவை அறிவார்களா? Manithan
