சுதந்திரபுரத்தில் 600 ஏக்கர் நிலக்கடலை செய்கை மழையினால் அழிவு(Photos)
முல்லைத்தீவில் கடந்த சில நாட்களாகத் தொடர்ச்சியாகப் பெய்துவரும் மழையினால் புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட சுதந்திரபுரம் கிராமத்தில் 600 ஏக்கர் வரையான நிலக்கடலை செய்கை முற்றாக அழிவடைந்துள்ளன.
சுதந்திரபுரம் கிராமத்தில் 1500 ஏக்கர் வரையில் மேட்டுநில பயிர்செய்கை மேற்கொள்ளப்பட்டபோதும் 1200 ஏக்கர் வரையில் நிலக்கடலை செய்கையினை மேற்கொண்டுள்ளார்கள்.
தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகின்றது. நிலக்கடலை செய்கை, மிளகாய் செய்கை, பூசணிசெய்கை, வெங்காய செய்கை, போன் செய்கைகளை மேற்கொண்ட விவசாயிகளின் விளைபயிர்கள் மழை வெள்ளத்தினால் அழிவடைந்துள்ளன.
பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் அதிகளவான விவசாயிகள் நிலக்கடலை செய்கையினை மேற்கொண்டுள்ள நிலையில் மழை வெள்ளத்தினால் அவை அழிவடைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளார்கள்.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் கடன் பெற்று அடைவு வைத்து நிலக்கடலை செய்கையினை மேற்கொண்டுள்ளார்கள்.
நிலக்கடலை ஒரு அந்தர் 22ஆயிரம் ரூபாவிற்கு
விற்பனை செய்யப்பட்டு வருகின்ற நிலையில், நெல்லில் அழிவினை சந்தித்த விவசாயிகள்
மேட்டுநில பயிராக நிலக்கடலையினை மேற்கொண்டனர்.
ஆகவே இந்த அழிவிற்கு அரசாங்கம் இழப்பீடு தரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்கள்.








