பா.ஜ.கவின் கனவைத் தகர்த்த இந்தியா கூட்டணி
மக்களவைத் தேர்தலில் ‘பா.ஜ.க 370 இடங்களில் வெற்றிபெற்று ஒட்டுமொத்தமாக தேசிய ஜனநாயகக் கூட்டணி 400 இடங்களைப் பிடிக்கும்’ என்ற பிரதமர் மோடியின் கனவை இந்தியா கூட்டணி தகர்த்துள்ளதாக தற்போது வரை பெறப்பட்ட முடிவுகளின் மூலம் வெளிப்படுகிறது என இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்றுவரும் நிலையில், மத்தியில் ஆட்சியமைக்கத் தேவையான 272 இடங்களுக்கு மேல் பா.ஜ.க கூட்டணி முன்னிலை வகித்துவருகிறது.
அதாவது, தேர்தல் நடைபெறுவதற்கு முன்பே போட்டியின்றி வெற்றிபெற்ற குஜராத்தின் சூரத் தொகுதியுடன் சேர்த்து 290-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பா.ஜ.க கூட்டணி முன்னிலை வகித்துவருகிறது.
அதே நேரம், ‘பா.ஜ.க 370 இடங்களில் வெற்றிபெற்று ஒட்டுமொத்தமாக தேசிய ஜனநாயகக் கூட்டணி 400 இடங்களைப் பிடிக்கும்’ என்ற பிரதமர் மோடியின் கனவைத் தகர்த்து, ‘இந்தியா’ கூட்டணி 230-க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை வகித்துவருகிறது.
பெரும்பாலான ஊடகங்களின் கருத்துக்கணிப்புகளும் பா.ஜ.க மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்றே குறிப்பிட்டன.
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள்
மேலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி 400 இடங்களில் வெல்லும், ‘இந்தியா’ கூட்டணி 100 இடங்களைப் பிடிக்கும்’ என்று தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் சில தெரிவித்தன.
பத்தாண்டுகள் ஆட்சியில் இருந்தாலும், ஆட்சியின் சாதனைகளைப் பெரிதாக முன்னிறுத்தாமல், மதரீதியான வெறுப்புப்பிரசாரத்தை பிரதமர் மோடி உள்ளிட்ட பா.ஜ.க தலைவர்கள் முன்னெடுப்பதாக கடும் விமர்சனம் எழுந்தது.
அத்தகைய பிரசாரம்தான் பா.ஜ.க-வின் பின்னடைவுக்குக் காரணம் என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். 2019 மக்களவைத் தேர்தலில், 303 இடங்களில் பா.ஜ.க வெற்றிபெற்றது.
ஆனால் இந்த முறை, தேசிய ஜனநாயகக் கூட்டணி 294 இடங்களில்தான் முன்னிலை வகிக்கிறது. குறிப்பாக வாரணாசி தொகுதியில் முதல் மூன்று சுற்றில் பிரதமர் மோடி பின்னடைவு என்ற செய்தி பா.ஜ.க-வினரிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறன்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |