மலையக எழுச்சி பாதயாத்திரையில் மகிந்த தேசப்பிரியவும் பங்கேற்பு
மலையக மக்களுக்கான உரிமைகளை வலியுறுத்தி தலைமன்னாரில் இருந்து மாத்தளை வரை முன்னெடுக்கப்பட்டு வரும் மலையக எழுச்சி நடை பயணத்துக்குத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தவிசாளர் மகிந்த தேசப்பிரியவும் ஆதரவு வழங்கியுள்ளார்.
தம்புள்ளையில் இருந்து நேற்று (11.08.2023) காலை ஆரம்பமான பாதயாத்திரையில் பங்கேற்று அவர் தமது ஆதரவை வெளிப்படுத்தினார்.

காணி உரிமை
மலையகத் தமிழர்களுக்கும் சம உரிமைகள் வழங்கப்பட வேண்டும், காணி உரிமை அவசியம், பெருந்தோட்டத் தொழிலாளர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக்க வேண்டும் என்பன உட்பட 10 பிரதான கோரிக்கைகளை முன்வைத்து ‘மலையக எழுச்சிப் பயணம்’ முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
2023 ஜுலை 28 ஆம் திகதி தலைமன்னாரில் ஆரம்பமான குறித்த பாத யாத்திரை இன்று (12.08.2023) மாத்தளையைச் சென்றடையவுள்ளது.
இலங்கை தேசிய கிறிஸ்தவ மன்றம், சிவில் அமைப்புகள் மற்றும் மலையக சமூகம்சார் செயற்பாட்டாளர்களை உள்ளடக்கிய 'மாண்புமிகு மலையக மக்கள்' கூட்டிணைவினால் இப்பாத யாத்திரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
லண்டனில் 36வது மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்த இந்திய குடும்பம்., சம்பவம் குறித்து வெளியான தகவல் News Lankasri
இயக்குநர் இமயம் சரிந்தது.. உடல்நலக்குறைவால் காலமானார் இயக்குநர் பாரதிராஜா.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam