சிறையில் தேசபந்து தென்னக்கோனின் ஆடைகள் களையப்பட்டனவா..!
பிடியாணை பிறப்பிக்கப்பட்டு பல நாட்களாக தேடப்பட்டு வந்த, தலைமறைவாகியிருந்து பின்னர் சரணடைந்த முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன்(Deshabandu Tennakoon) தற்போது விளக்கறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் அவர் தொடர்பான கருத்தாடல்களே சமகாலத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.
மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் கடந்த 20ஆம் திகதி தேசபந்து தென்னக்கோன் மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது அவரை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவு பிறப்பித்தார்.
இந்தநிலையில், சிறைச்சாலைக்குள் இருக்கும் தேசபந்துவின் பாதுகாப்பு நடவடிக்கைகள் இறுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளதுடன், அவர் உணவு உண்பதற்கு மறுப்பு தெரிவித்துள்ளதாகவும், சிறைச்சாலைக்கு வெளியில் இருந்து உணவினைப் பெற்றுக்கொள்ள கோரிக்கை விடுத்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இது இவ்வாறிருக்க விளக்கமறியலில் வைக்கப்படும் ஒரு கைதிகளின் உடைகள் களையப்பட்டு அடையாளப்படுத்தப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்ற கருத்தொன்று தற்போது முன்வைக்கப்பட்டுள்ளது.
இதன்படி, தேசபந்து தென்னக்கோனும் அவ்வாறான விசாரணை ஒன்றுக்கு உட்படுத்தப்பட்டாரா என்ற கேள்வியும் தற்போது எழுப்பப்பட்டுள்ளது.
இந்தநிலையில், இது தொடர்பான விரிவாக ஆராய்கின்றது இன்றைய செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,

தமிழ்த் தலைவர்கள் ஒருபோதும் முடிவடையாத பேச்சுவார்த்தையின் எஜமானர்கள் 17 மணி நேரம் முன்

ரோஹினியை தரதரவென இழுத்து வெளியே தள்ளிய விஜயா, என்ன விஷயம் தெரிந்தது.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam

Fire பட வெற்றிக்கு பிறகு புதிய சீரியலில் கமிட்டாகியுள்ள நடிகை ரச்சிதா... எந்த டிவி தொடர், முழு விவரம் Cineulagam
