பிணையை எதிர்பார்த்து நீதிமன்றத்தில் காத்திருக்கும் தேசபந்து தென்னகோன்
முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன்(Deshabandu Tennakoon), தனக்குப் பிணை கிடைக்கும் என்ற உறுதியான நம்பிக்கையுடன் நீதிமன்றத்தில் காத்திருக்கின்றார்.
கடந்த 2023ம் ஆண்டு வெலிகம, பெலேன பிரதேசத்தில் அமைந்துள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் தொடர்பில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிராக மாத்தறை நீதிமன்றம் பிடியாணை உத்தரவு பிறப்பித்திருந்தது.
பிணை மனு மீதான விசாரணை
அதனை எதிர்த்து மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தான்கைது செய்யப்படுவதை தவிர்க்கும் வகையில் எழுத்தாணையொன்றை கோரி ரிட் மனுவொன்றை தாக்கல் செய்த தேசபந்து தென்னகோன், அது நிராகரிக்கப்பட்ட நிலையில் நேற்றைய தினம் மாத்தறை நீதிமன்றத்தில் சட்டத்தரணிகள் ஊடாக சரணடைந்திருந்தார்.
அதனையடுத்து இன்றைய தினம் வரை விளக்கமறியலில் வைக்கப்பட்ட அவர், அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தார்.
இன்றைய தினம் அவரது பிணை மனு மீதான விசாரணைகள் நடைபெற்றுள்ள நிலையில் பிற்பகல் இரண்டு மணியளவில் அது தொடர்பான தீர்ப்பு வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சற்று முன்னர் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட தேசபந்து தென்னக்கோன் தனக்குப் பிணை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் காத்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.