பொலிஸ் மா அதிபர் வெளியிட்டுள்ள விசேட சுற்றுநிருபம்
பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் புதிய சுற்று நிருபம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பொலிஸ் விசாரணைகளின் போது தகவல்களை ஊடகங்களுக்கு எவ்வாறு வழங்குவது என்பது தொடர்பில் இந்த சுற்று நிருபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூட்டு சம்பவம்
அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களையும் அறிவுறுத்தும் வகையில் இந்த சுற்று நிருபம் வெளியிடப்பட்டுள்ளது.
விசாரணைகளின் போதான தகவல்களை ஊடகங்களுக்கு எவ்வாறு வழங்குவது என்பது குறித்து எற்கனவே பல்வேறு சந்தர்ப்பங்களில் சுற்றுநிருபங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
கைது செய்யப்படும் சந்தேக நபர்கள் பற்றிய விபரங்கள் ஊடகங்களில் வெளியிடப்படுவது குறித்து கட்டுப்படுத்தும் வகையில் புதிய சுற்று நிருபம் இன்றைய தினம் வெளியிடப்பட்டுள்ளது.

அத்துருகிரிய பிரதேசத்தில் அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் கைதான சந்தேக நபர் ஒருவரிடம் பொலிஸார் விசாரணை நடத்தும் காணொளி ஊடகங்களில் வெளியிடப்பட்டிருந்தது.
இந்த விவகாரம் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில் நீதி அமைச்சரும் பொலிஸாரின் நடவடிக்கையை பகிரங்கமாக விமர்சனம் செய்திருந்தார்.
இவ்வாறான ஓர் பின்னணியில் சந்தேக நபர்கள் பற்றிய விபரங்களை ஊடகங்களுக்கு வெளியிடுவது குறித்து சுற்று நிருபம் வெளியிடப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
ஐரோப்பிய நாடொன்றுக்கு எச்சரிக்கை விடுத்த டிரம்ப்: வர்த்தகத்தை நிறுத்த அமெரிக்கா திட்டம் News Lankasri
மூன்று முடிச்சு சீரியலில் ஹீரோவாக நடிக்கும் நியாஸ் கான் வாங்கும் சம்பளம்.. எவ்வளவு தெரியுமா Cineulagam
ஏழு மாதங்கள் மகா பெரிய போர்... அச்சத்தை உருவாக்கியுள்ள பிரெஞ்சு ஜோதிடக்கலைஞரின் கணிப்பு News Lankasri