தேசபந்து ஒளிந்திருக்கும் இடம்..! டிரான் அலஸ் வழங்கியுள்ள தகவல்
தலைமறைவாகியுள்ள முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தனது வீட்டில் ஒளிந்து கொண்டிருப்பதாக பரவும் செய்தி தவறானது என்று முன்னாள் அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
தேசபந்து தென்னகோன் தொடர்பில் ஊடகம் ஒன்றுக்கு கருத்து வழங்கிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர், இப்போதெல்லாம், சிலர் சமூக ஊடகங்களில் தனது பெயரைப் பயன்படுத்தி தன்னை கேலி செய்வதாகக் கூறியுள்ளார்.
தான் முட்டாள் அல்ல...
அத்துடன், தேசபந்து தென்னகோனை தனது வீட்டில் மறைத்து வைக்கும் அளவுக்கு தான் முட்டாள் அல்ல என்றும் டிரான் அலஸ் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, கைது செய்யுமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை தடுக்க இடைக்காலத் தடை உத்தரவு கோரி, தற்போது தலைமறைவாகியுள்ள தேசபந்து தென்னகோனால் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது.
குறித்த ரிட் மனுவை நேற்று (17) மேன்முறையீட்டு நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமல் தள்ளுபடி செய்தது.
அதுமாத்திரமன்றி, தேசபந்து தப்பிச் செல்வதற்கு உதவிய மற்றும் உடந்தையாக இருந்த நபர்கள் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்குமாறும் மாத்தறை நீதிமன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

சூடுபிடிக்கும் பட்டலந்தை விவகாரம்: ரணிலை கைது செய்ய - அவரின் குடியுரிமையை இரத்து செய்ய முடியாது என்கிறார் கம்மன்பில
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |