பொலிஸ் மா அதிபராக தேசபந்து தென்னக்கோன் நியமனம்
புதிய இணைப்பு
நாட்டின் அடுத்த பொலிஸ் மா அதிபராக தேசபந்து தென்னக்கோன் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் சற்று முன்னர் தேசபந்து தென்னக்கோனுக்கு நியமனக் கடிதம் வழங்கி வைக்கப்பட்டது.
மேலும், நாட்டின் 36ஆவது பொலிஸ் மா அதிபராக தேசபந்து தென்னக்கோன் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 41ஆ.(1) மற்றும் 61ஈ(ஆ) ஏற்பாடுகளின் பிரகாரம்,ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அமைவாக இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
பாதாள உலகக் குற்றவாளிகள் மற்றும் போதைப் பொருள் பாவனைக்கு எதிராக நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் "யுக்திய" நடவடிக்கையைத் தொடர்ந்து, பதில் பொலிஸ் மா அதிபராக (IGP) தேசபந்து தென்னகோனின் நியமனத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நீடிக்கவுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இது குறித்து மேலும் தெரிய வருகையில், தென்னகோன், ஆரம்பத்தில் 2023 நவம்பர் 29ஆம் திகதியன்று மூன்று மாத காலத்திற்கு பதில் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டார்.
நிரந்தர பொலிஸ் மா அதிபராக நியமனம்
இந்நிலையில், தற்காலிக நீடிப்பு பாதையை தவிர்த்து தென்னகோன் நிரந்தர பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது. மேலும், 1998ஆம் ஆண்டு காவற்றுறையில் இணைந்த தென்னகோன் எதிர்வரும் 2032ஆம் ஆண்டு ஓய்வு பெறவுள்ளார்.
கடந்த 2023 டிசம்பரில் தொடங்கப்பட்ட நாடு தழுவிய "யுக்திய" நடவடிக்கையின் பின்னணியில் அவரது சாத்தியமான நீட்டிக்கப்பட்ட அல்லது நிரந்தர நியமனம் வந்துள்ளது.
பொது பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் இலங்கை காவற்றுறை தலைமையிலான இந்த முயற்சி போதைப்பொருள் கடத்தல், கடத்தல் மற்றும் பிற குற்றச் செயல்களை ஒடுக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
நீடிக்கப்படவுள்ள நியமனம்
2024ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்குள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புகளை அகற்றுவோம் என அமைச்சர் டிரன் அலஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
யுக்திய நடவடிக்கையின் முதல் இரண்டு மாதங்களில் குறிப்பிடத்தக்க வெற்றி கிடைத்துள்ளதாகவும், போதைப்பொருள் வலையமைப்பை அகற்றும் இறுதி இலக்கை அடையும் வரை அதன் தொடர்ச்சியை மேற்கொள்ளவுள்ளதாகவும் பதில் பொலிஸ் மா அதிபர் தென்னகோன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையிலேயே, ஜனாதிபதியால் தென்னகோனின் நியமனம் நீடிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |