மட்டக்களப்பு பிரதிப் பதிவாளர் நாயகம் கந்தசாமி திருவருள் ஓய்வு
மட்டக்களப்பு பிரதிப் பதிவாளர் நாயகம் கந்தசாமி திருவருள், சேவையில் இருந்து தனது தனிப்பட்ட வைத்திய தேவை கருதி ஓய்வு பெற்றுள்ளார்.
இவர் மட்டக்களப்பு பிரதிப் பதிவாளர் நாயகம் காரியாலயத்தில் மக்கள் சேவையில் 18 வருடங்கள் உதவிப்பதிவாளர் நாயகம் மற்றும் பிரதிப்பதிவாளர் நாயகமாக கடமையாற்றியுள்ளார்.
மேலும், இவர் கடமையாற்றிய காலங்களில் நெருக்கடியான சூழ்நிலையிலும் திருகோணமலை தொடக்கம் அம்பாறை மாவட்டம் வரை மட்டக்களப்பு காரியாலயத்தை நாடி வரும் மக்களுக்கு இனம், மதம் கடந்து சேவை வழங்கியுள்ளார்.
தனிப்பட்ட வைத்திய தேவை
இவரது சேவையில் பதவிக்காலம் இன்னும் 5 ஆண்டுகள் உள்ள போதிலும் தனது தனிப்பட்ட வைத்திய தேவை கருதி ஓய்வூதிய காலங்களுக்கு முன்பாகவே சேவையில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.
மட்டக்களப்பில் இவரது ஓய்வுதியம் என்பது மிகப்பெரிய ஈடு செய்ய முடியாத இழப்பு என்பதோடு சகலருக்கும் திருப்தி அளிக்கும் வகையில் இவர் தனது சேவையை செய்துள்ளார் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |