ஐக்கிய இராச்சியத்தின் துணைப் பிரதமர் இலங்கை விஜயம் தொடர்பில் வெளியான தகவல்
ஐக்கிய இராச்சியத்தின் துணைப் பிரதமர் டேவிட் லாம்மி, எதிர்வரும் 17ஆம் திகதி இலங்கைக்கு ஒரு குறுகிய கால பயணத்தை மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன்போது, இலங்கையின் முக்கிய தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்த விஜயத்தின் மிக முக்கியமான நோக்கம், சிறுவர் பராமரிப்பு சீர்திருத்தம் தொடர்பான உலகளாவிய சாசனத்தில் கையெழுத்திடுவதாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை விஜயத்திற்கான நோக்கம்
இதேவேளை, ஐக்கிய இராச்சியத்தின் துணைப் பிரதமர் டேவிட் லாம்மி, எதிர்வரும் 17ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலையிலேயே நாடு திரும்பவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், சிறுவர் பராமரிப்பு சீர்திருத்தம் தொடர்பான உலகளாவிய சாசனம், குழந்தைகள் அனாதை இல்லங்களில் வளர்வதை விட, குடும்பச் சூழலில் வளர்வதை உறுதி செய்ய முதலீடு செய்தல் மற்றும் ஆதரவற்றோர் சுற்றுலா போன்ற தீங்கு விளைவிக்கும் நடைமுறைகள் முடிவுக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது.
அத்துடன், ஐ.நா.வின் சிறுவர் உரிமைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளை நிலைநாட்டுவதற்காக உலக நாடுகளை ஒன்றிணைத்தல், மேலும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்க முறையான கட்டமைப்புகளை உருவாக்குதல் போன்ற விடயங்களும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
மஹா சிவராத்திரி 2026 நேரலை
உயிலை தேடி சீல் வைத்த வீட்டிற்குள் எகிறி குதித்த சோழன், நிலா.. அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போவது இதுதான் Cineulagam