கடந்த கால காணி ஒதுக்கீடுகள் குறித்து விசாரணை! பிரதியமைச்சர் சுசில் ரணசிங்க
கடந்த காலங்களில் அரசாங்க காணிகள் ஒதுக்கீடு செய்யப்பட்ட சம்பவங்கள் குறித்து துரித விசாரணையொன்றை நடத்தவுள்ளதாக காணி, நீர்ப்பாசன பிரதியமைச்சர் சுசில் ரணசிங்க(Susil Ranasingha) தெரிவித்துள்ளார்.
திங்கட்கிழமை (06) மாலை அநுராதபுரத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
காணி ஒதுக்கீடுகள்
அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
காணி சீர்திருத்த ஆணைக்குழு மூலம் தொழிற்சாலைகள் மற்றும் விவசாய நோக்கங்களுக்காக அரசாங்க காணிகள் விடுவிக்கப்படுகின்றன.
எனினும் கடந்த காலங்களில் நடைபெற்ற காணிப் பங்கீடு, காணிப் பரிமாற்றம் என்பவற்றில் பாரிய மோசடிகள் நடைபெற்றுள்ளதாக அறியக் கிடைத்துள்ளது.
அதன் காரணமாக கடந்த 2015ம் ஆண்டின் நல்லாட்சி அரசாங்க காலத்தில் இருந்து மேற்கொள்ளப்பட்ட காணிப் பங்கீடுகள் மற்றும் காணிப் பரிமாற்றங்கள் குறித்து துரிதமான விசேட விசாரணையொன்றை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளோம் என்றும் பிரதியமைச்சர் சுசில் ரணசிங்க தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |