பிரதியமைச்சர் சுகத் திலக்கரத்னவின் சமூக வலைத்தளப் பதிவு: அரசியல் நிலைப்பாட்டின் வெளிப்பாடா..!
விளையாட்டு பிரதி அமைச்சரும், முன்னாள் தேசிய ஓட்டப்பந்தய வீரருமான சுகத் திலகரத்ன 30ஆம் தேதி சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ள ஒரு பதிவு சமூக வலைத்தளங்களில் பேசும் பொருளாக மாறியுள்ளது.
அவரது உத்தியோகபூர்வ முகநூல் கணக்கில் பதிவிடப்பட்டுள்ள அந்தக் குறிப்பில், “ஒரு சில பதவிகள் கிடைக்கப் பெறுவதால் முன்பு இருந்ததையும் இழக்க நேரிடுகின்றது” என்று குறிப்பிட்டுள்ளார்.
பதவி விலகல் சர்ச்சை
இலங்கை இதுவரை உருவாக்கிய மிகச்சிறந்த ஓட்டப்பந்தய வீரர்களில் ஒருவராகக் கருதப்படும் சுகத் திலகரத்ன, 2024 பொதுத் தேர்தலுக்குப் பிறகு முதன்முறையாக நாடாளுமன்ற அரசியலில் நுழைந்து, பின்னர் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

இருப்பினும், சமீப காலங்களில், அவர் அரசியல் விவகாரங்களில் ஓரளவு விரக்தியடைந்துள்ளதாகவும், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை விலகல் செய்துவிட்டு வெளிநாடொன்றில் குடியேறத் தயாராகி வருவதாகவும் பல்வேறு வதந்திகள் சமூக ஊடகங்களிலும் அரசியல் களத்திலும் பரவி வருகின்றன.
ஆயினும், அந்த வதந்திகள் குறித்தோ அல்லது தனது தற்போதைய அரசியல் நிலை குறித்தோ சுகத் திலகரத்ன இதுவரை அதிகாரபூர்வ அறிக்கை எதையும் வெளியிடவில்லை.
எனவே, அவரது சமீபத்திய முகநூல் பதிவு மேற்கூறிய வதந்திகளுடன் தொடர்புடையதா என்பது குறித்து இதுவரை உறுதியான எந்தத் தகவலும் வெளியாகவில்லை.

உடன் வைத்திய உதவியை நாடவும்! அறிகுறிகளுடன் இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடிப்பவர்களுக்கு எச்சரிக்கை