பிரதி அமைச்சர் நளின் ஹேவகே வவுனியாவுக்கு விஜயம்
வவுனியாவிற்கு வருகை தந்த தொழில் கல்விப் பிரதி அமைச்சர் நளின் ஹேவகே, வவுனியா மாவட்டங்களில் உள்ள தொழிற்கல்வி நிலையங்களுக்கு விஜயம் செய்து அதனை பார்வையிட்டுள்ளார்.
வவுனியாவிற்கு வருகை தந்த தொழில் கல்வி பிரதி அமைச்சர் தொழில் கல்வி நிலையங்களை பார்வையிட்டதுடன், அதன் தேவைப்பாடுகள் தொடர்பாகவும் கேட்டறிந்து கொண்டார்.
குறித்த அரச தொழில் கல்வி நிலையங்களில் கற்கும் மாணவர்களுடனும் கலந்துரையாடியுள்ளார்.
திறந்து வைக்கப்பட்ட வீதி
அந்தவகையில், நைற்றா, வீற்றா, ஏரிஐ ஆகிய தொழில் கல்வி நிலையங்களை பார்வையிட்டதுடன், எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடி இங்கு காணப்படும் குறைபாடுகளுக்கான நிதிகளைப் பெற்றுத் தர நடவடிக்கை எடுப்பதாக இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது, கனகராயன்குளம் மகா வித்தியாலயத்தையும் பார்வையிட்டதுடன் புதிதாக காபட் இடப்பட்ட 2 கிலோ மீற்றர் நீளமான கனகராயன்குளம் - விஞ்ஞானம் குளம் வீதியையும் திறந்து வைத்துள்ளார்.
இதன்போது, தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான ம.ஜெகதீஸ்வரன், செ.திலகநாதன் மற்றும் கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களும் பிரசன்னமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |










