கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் ஆய்வுகூட கட்டடத்தொகுதி நிறுவுவது தொடர்பில் ஆராய்வு
கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கான ஆய்வுக்கூட கட்டடப் பணிகளை நிறுவுதல் தொடர்பில் ஆராய்வதற்காகச் சுகாதார சேவைகள் ஆய்வுக்கூட சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு இன்று விஜயம் செய்துள்ளார்.
வவுனியா மாவட்ட வைத்தியசாலைக்கு நேற்றைய தினம் விஜயம் செய்த இவர், தொடர்ந்து வவுனியா மாவட்ட வைத்தியசாலையினுடைய நிலைமைகளைப் பார்வையிட்டு வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் பி.சி.ஆர் ஆய்வுக்கூடம் தொடர்பிலான ஆயத்த பணிகளைப் பார்வையிட்டுள்ளார்.
அத்துடன் தற்போது வவுனியா வைத்தியசாலை செயற்பாடுகள் தொடர்பிலும் பார்வையிட்டுக் கலந்துரையாடிய இவர் இன்று பிற்பகல் 4 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு விஜயம் செய்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் ஆய்வுகூட கட்டடத் தொகுதி நிறுவுவது தொடர்பில் ஆராய்வதற்காகவும் ஆலோசனைகளை வழங்கும் பொருட்டு இவர் விஜயம் மேற்கொண்டிருந்தார்.
தற்போதைய வவுனியா வைத்தியசாலைப் பணிப்பாளராக உள்ள வைத்திய கலாநிதி இராகுலன் கிளிநொச்சி வைத்தியசாலைப் பணிப்பாளராக இருந்த போது இதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டது.
சுகாதார அமைச்சின் ஊடாக குறித்த ஆய்வுக்கூட கட்டடத் தொகுதி நிறுவுவதற்கு
50மில்லியன் ரூபா நிதி கிடைக்கப் பெற்றுள்ள நிலையில் இன்றைய தினம்
பிரதியமைச்சர் வைத்தியசாலைக்கு விஜயம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஹெலிகொப்டரிலிருந்து கொட்டிய பணம்: இறுதிச்சடங்கில் பங்கேற்றவர்களுக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி News Lankasri

வீட்டைவிட்டு வெளியே போன மீனா, விஜயாவிற்கு ஷாக் கொடுத்த முத்து.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam
