தொல்லியல் திணைக்களத் துணை ஆணையர் பதவி விலக வேண்டும்: மறவன்புலவு சச்சிதானந்தம்
தொல்லியல் திணைக்களத் தலைவர் மட்டுமன்றி வவுனியாத் தொல்லியல் திணைக்களத் துணை ஆணையர் செயதிலகரும் பதவி விலக வேண்டும் என மறவன்புலவு சச்சிதானந்தம் தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் (14.06.2023) அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில்,
இந்து புத்த நல்லிணக்கத்தைக் கெடுத்தவர் செயதிலகர். சிவசேனையில் உள்ள நாங்கள் கூறுகிறோம், வட மாகாணத்தில் தொல்லியல் திணைக்கள அடாவடித்தனங்களுக்கு வவுனியாத் தொல்லியல் துணை ஆணையர் செயதிலகரே காரணம்.
நல்லிணக்கத்துக்கு இடையூறு
சிவசேனையினர் அவரிடம் சென்று முறையிட்டோம். நல்லிணக்கத்துக்கு இடையூறாக இருக்காதீர்கள் எனக் கோரினோம்.
எனவே சட்டங்களுக்கு அமைய நடப்பேன், யார் சொன்னாலும் விட்டுக்கொடுக்க மாட்டேன் என்றார்.
குடியரசுத் தலைவர் உடனடியாக அவரையும் இடமாற்றியோ இடைநிறுத்தியோ விசாரணைகளைத்
தொடங்க வேண்டும்
குடியரசுத் தலைவரின் இந்து புத்த நல்லிணக்க முயற்சிகளைச் சிவ சேனை
பாராட்டுகிறது என குறிப்பிட்டுள்ளார்.




