யாழில் குடியிருப்பு சான்றிதழ்கள் வழங்கி வைப்பு
உலக குடியிருப்பு தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாண குடியிருப்பாளர்களுக்கான குடியிருப்பு சான்றிதழ்கள் இன்று வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
ஒக்டோபர் 06 உலக குடியிருப்பாளர் தினத்தையொட்டி நகர அபிவிருத்தி நிர்மானிப்பு மற்றும மீள்குடியேற்ற அமைச்சினால் குடியிருப்பாளர்களுக்கான குடியிருப்பு சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

இன்று இரவு வரை அவதானமாக இருங்கள்..! வவுனியா - முல்லைத்தீவு உட்பட்ட சில மாவட்டங்களுக்கு அவசர அறிவிப்பு
கடந்த கால அரசாங்கங்களை போன்று
இந்த ஆண்டு பல்வேறு வீட்டுத்திட்டங்களைப் பெற்றுக் கொண்ட 620 பேருக்கு குடியிருப்பு சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
மாவட்ட அரச அதிபர் ம.பிரதீபன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் நகர அபிவிருத்தி நிர்மானிப்பு மற்றும மீள்குடியேற்ற அமைச்சின் திட்டமிடல் தீபானி பிரியங்க, அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன் ஸ்ரீ பாவனந்தராஜா ஆகியோர் மற்றும் பிரதேச செயலாளர்கள் கலந்து கொண்டு குடியிருப்பாளர்களுக்கான குடியிருப்பு சான்றிதழ்கள் வழங்கி வைத்துள்ளனர்.
இதன்போது நாடு பொருளாதார ரீதியில் முன்னேற்றம் அடைந்து வருவதாகவும் மக்களுக்கு கடந்த கால அரசாங்கங்களை போன்று அல்லாது சேவை வழங்குவதற்கு தாம் முன்னிப்பதாகவும் அமைச்சர் இ.சந்திரசேகரன் குறிப்பிட்டார்.
நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் பயங்கரவாத தடைச் சட்டம் தொடர்பாகவும், மன்னர் காற்றாலை விவகாரம் தொடர்பாகவும், செம்மணி தொடர்பாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சனாவின் கருத்து தொடர்பாகவும் தனது கருத்துக்களை முன்வைத்தார்.
நல்லொழுக்க தினத்தை முன்னிட்டு
இதேவேளை, சர்வதேச நல்லொழுக்க தினமானது இன்றையதினம் (03) கடைப்பிடிக்கப்படும் நிலையில் வட பிரதேச நல்லொழுக்க சம்மேளனத்தின் ஏற்பாட்டில் சர்வதேச நல்லொழுக்க தினமானது கடைப்பிடிக்கப்பட்டது.
அந்தவகையில் சங்கானையில் உள்ள அவர்களது அலுவலகத்தில் இந்த நிகழ்வானது முன்னெடுக்கப்பட்டது.
வட பிரதேச நல்லொழுக்க சம்மேளனத்தின் தலைவர் புஸ்பராசா தலைமை க்ஷயில் நடைபெற்ற இந்த நிகழ்வில் விருந்தினர்களாக கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன், நாடாளுமன்ற உறுப்பினர் சிறீ பவானந்தராஜா ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதன்போது வறுமைக் கோட்டிற்கு உட்பட்ட தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |








