சுவிட்சர்லாந்திலிருந்து இலங்கையைச் சேர்ந்த 6 பெண்கள் உட்பட 16 பேர் நாடுகடத்தப்பட்டுள்ளனர்
கடந்த திங்கள்கிழமை (21.02.2022) இரவு 22:30 மணி அளவில் சுவிட்சர்லாந்து விமானநிலையம் ஒன்றில் இருந்து இலங்கையைச் சேர்ந்த 10 ஆண்களும் (ஒரு முதியவர் உட்பட) 6 பெண்கள் உள்ளடங்களாக 16 பேர் நாடுகடத்தப்பட்டுள்ளனர்.
நாடு கடத்தப்பட்ட இவர்கள் ஒரு தனி விமானம் மூலம் 45 சுவிஸ் பொலிஸாரின் பாதுகாப்புடன் மற்றும் 1 சுவிஸ் குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரியின் கண்காணிப்பில் இலங்கை விமான நிலையம் வரை சென்று நேற்றைய தினம் (22.02.2022) காலை 9:00 மணி அளவில் இலங்கை விமானநிலைய குடிவரவு குடியகல்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
நாடு கடத்தப்பட்டவர்களில் ஓர் இளைஞன் தனக்கு இலங்கைக்கு சென்றால் இலங்கை அரசினால் உயிர் ஆபத்து இருப்பதாக கூறி செல்ல மறுத்த போது அவ் இளைஞனும் நாடுகடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் தான் மிகுந்த மன அழுத்தத்துடனும் இருப்பதாகவும் இலங்கை அரசினால் தனது உயிருக்கு என்ன ஆகுமோ என்ற பயத்துடன் இருப்பதாக அவ் இளைஞன் கருத்து வெளியிட்டுள்ளார்.
அனுப்பப்பட்டவர்களில் முதியவர் ஒருவர் கீழே விழுந்து கையில் காயம் உண்டானதாக கூறப்படுகிறது, அவருக்கும் உடனடியாக மருந்து கட்டப்பட்டு இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார் என அந்த விமானத்தில் பயணித்த இன்னுமோர் அகதி தஞ்ச கோரிக்கையாளர் தகவல் வெளியிட்டுள்ளார்.
You My Like This Video