ஐ.நா சார்ந்திருப்பது இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்காகவா அல்லது அப்பாவி மக்களுக்காகவா? தேரர் எழுப்பும் கேள்வி
பிரியந்த குமாரவின் மரணம் தொடர்பாகச் சர்வதேச தலையீட்டுடன் அவருடைய மரணத்திற்கு நீதியைப் பெற்றுத்தருமாறு ஐ.நா சபையை நாம் வலியுறுத்துகின்றோம் என ஜம்புரேவெல சந்திரரதன தேரர் தெரிவித்துள்ளார்.
அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
நேற்றையதினம் பாகிஸ்தானின் பாதுகாப்பு அமைச்சர் ஊடகங்களுக்கு ஒரு விடயத்தைக் கூறியிருந்தார். இந்த இளைஞர்கள், அவர்களுடைய உத்வேகம் காரணமாகவும், அவர்களுடைய சிந்தனை காரணமாகவும், மதம் குறித்த பற்றுதல் காரணமாகவும் இப்படியான விடயங்களில் ஈடுபடும் வாய்ப்புக்கள் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.
நாமும் இளம் வயதில் இப்படி தான் இருந்தோம், ஆகவே இவற்றைப் பெரிதாக எடுக்கத் தேவையில்லை என இந்த கொலையைச் சாதாரணமாக்கும் வகையில் பாகிஸ்தானின் பாதுகாப்பு அமைச்சர் கருத்து வெளியிட்டுள்ளார்.
ஒரு நாட்டில் வாழும் ஒரு பிரஜையின் உரிமைகள் வேறு நாட்டில் வாழும் பிரஜையால் பறிக்கப்படும் போது அந்த உரிமைகளை பாதுகாப்பதற்கே ஐக்கிய நாடுகள் சபை போன்ற சர்வதேச அமைப்புக்கள் உருவானது.
ஆனால் பிரியந்த குமாரவின் கொலை தொடர்பில் ஐ.நா சபையோ அல்லது வேறு எந்த சர்வதேச அமைப்புக்களுமே இதுவரை எந்தவொரு அறிக்கையினையும் வெளியிடவில்லை.
ஆகவே நீங்கள்
சார்த்திருப்பது இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்காகவா அல்லது சாதாரண அப்பாவி குடி
மக்களுக்காகவா? என ஐ.நா அமைப்பிடம் நாம் கேள்வியெழுப்புகின்றோம் எனத் தெரிவித்துள்ளார்.
புடின் அணு ஆயுதத் தாக்குதல் நடத்தினால்? 10 லட்சம் பேர் தப்பிக்க நிலத்தடி நகரம்..உருவாக்கிய நாடு News Lankasri
சவப்பெட்டியில் டிரம்ப் குடும்பம்: “ரத்தத்திற்கு ரத்தம்” ஈரானின் விளம்பர பலகையால் வெடித்த சர்ச்சை News Lankasri
ஐரோப்பாவை வாட்டும் வெப்பம்... குரோஷியாவின் கடலடி அருங்காட்சியகத்தில் குவியும் சுற்றுலாப் பயணிகள்! Manithan
ரிலீஸுக்கு இன்னும் 4 நாட்கள் தான்.. முன்பதிவில் ஜனநாயகன் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam
வளைகுடா பகுதியில் ஈரான் தீவிர தாக்குதல்- உயர் எச்சரிக்கையில் அமெரிக்கா, குவைத், பஹ்ரைன் News Lankasri