அநுர அரசாங்கம் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை (Mahinda Rajapaksa) உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து வெளியேற்றி, பயங்கரவாதிகளின் எதிர்பார்ப்பை அரசாங்கம் பூர்த்தி செய்யவுள்ளதாக சாகர காரியவசம் (Sagara Kariyawasam) குற்றம் சாட்டியுள்ளார்.
பத்தரமுல்லை, நெளும் மாவத்தையில் அமைந்துள்ள ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் இன்று (20) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் விஜேராம உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து அவரை வெளியேற்றப் போவதாக இந்த அரசாங்கம் அறிவித்துள்ளது.
அரசாங்கத்தின் செயற்பாடு
அத்தோடு, அவரின் பாதுகாப்பை மீளப்பெறவுள்ளதாகவும் அச்சுறுத்தல் விடுக்கின்றது.
இந்த நாட்டை பயங்கரவாதிகளின் பிடியில் இருந்து மீட்டெடுத்த மகிந்த ராஜபக்சவை இலக்கு வைப்பதற்கு பயங்கரவாதிகளுக்கு இலகுவான வழியை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் அரசாங்கத்தின் செயற்பாடு அமைந்துள்ளது.
அந்தவகையில் அரசாங்கத்தின் இவ்வாறான செயற்பாடுகளை வன்மையாக கண்டிக்கின்றோம்” என்று தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |