நாட்டின் மின்வலு மற்றும் எரிசக்தி துறைகளை இந்தியாவும், அமெரிக்காவும கட்டுப்படுத்துகின்றன
நாட்டின் மின்வலு மற்றும் எரிசக்தி துறைகளை இந்தியாவும், அமெரிக்காவும் கட்டுப்படுத்துவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார்.
இந்த அரசாங்கம் நாட்டு மக்களின் அனைத்து உரிமைகளையும் முடக்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு தனது கடமையை செய்ய தவறியுள்ளதாகவும், முன்அறிவித்தல் இன்றி மின்சாரம் துண்டிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
கெரவலபிட்டிய யுகதனவ் மின்உற்பத்தி நிலையம் அமெரிக்க நிறுவனமொன்றுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். கடன் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு அரசாங்கம் முனைப்பு காட்டவில்லை எனவும் சர்வதேச சமூகத்திடம் பிச்சை ஏந்திக் கொண்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடு பெரும் நெருக்கடி நிலையை எதிர்நோக்கியுள்ளதாகவும் கடன் வழங்கும் நிறுவனங்கள் இலங்கைக்கு கடன் வழங்குவதனை நிறுத்திக் கொண்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கறுப்பு ஜூலை 1983ஆம் ஆண்டின் ஆறாவடுவும் தீராத தமிழர் பிரச்சினையும் 8 மணி நேரம் முன்
ஹார்முஸ் முடக்கத்தால் தத்தளிக்கும் ஆசிய நாடுகள்... சத்தமின்றி கனடா பக்கம் திரும்பிய ஜப்பான் News Lankasri