வடக்கில் வனஜீவராசிகள் திணைக்களத்தினால் எல்லையிடும் நடவடிக்கை நிறுத்தம்
வடக்கில் வனஇலாக,வனஜீவராசிகள் திணைக்களத்தினால் எல்லையிடும் நடவடிக்கை நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
ஒட்டுசுட்டான் முத்தையன்கட்டுப்பகுதியில் நடைபெற்ற சந்திப்பின்போது கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்கில் காணிகளுக்கு வனஜீவராசிகள் திணைக்களத்தினால் எல்லைக்கற்கள் போடுவது தொடர்பில் கடந்த வாரம் நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் வடக்கு மாகாண ஆளுநர், அரசாங்க அதிபர்கள்,நாடாளுமன்ற உறுப்பினர்கள் ,காணிபிரதி அமைச்சர் நீர்பாசன பிரதி அமைச்சர்,வனஇலாகா திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்டவர்களுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது.
பொருத்தமான நடவடிக்கை
இதன்போது, வடக்கில் வனஇலாக திணைக்களத்தினால் காணிகளுக்கு எல்லையிடும் நடவடிக்கைகளை நிறுத்தியுள்ளோம்.
கடந்த அரசாங்க காலகட்டத்தில் ஜீ.பி.எஸ்.தொழில்நுட்பம் ஊடாக எல்லையிடப்பட்டுள்ளது அதுவும் வர்த்தகமானி அறிவித்தல் ஊடாக எல்லையிடப்பட்டுள்ளது இதனை நிறுத்தியுள்ளோம்.
கிராமத்து மக்கள் கிராமசேவையாளர்,பிரதேச செயலாளர்.மாவட்ட அரசாங்க அதிபர்களுடன் கலந்துரையாடி மக்கள் குடியிருக்கும் காணிகள் அல்லது விவசாயம் செய்யும் காணிகளை விடுவிக்கும் வகையிலான கலந்துரையாடல்கள் ஐனாதிபதி மட்டத்தில் நடைபெற இருக்கின்றது.
அதன் பின்னர் பொருத்தமான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

இந்த மாதங்களில் பிறந்த ஆண்கள் திருமணத்தின் பின் கோடிஸ்வரயோகம் பெறுவார்களாம்! நீங்க எந்த மாதம்? Manithan

மகாநதியை தொடர்ந்து விஜய் டிவியில் மாற்றப்படும் 2 சீரியல்களின் நேரம்.. எந்தெந்த தொடர் தெரியுமா? Cineulagam
